பீர்பாட்டிலால் சரமாரியாக குத்தி பிரபல ரவுடி படுகொலை

Apr 23, 2024 - 20:17
 0  10
பீர்பாட்டிலால் சரமாரியாக குத்தி பிரபல ரவுடி படுகொலை

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 60வது பிளாக்கை சேர்ந்தவர் நவீன்குமார் (எ) வாழைப்பழ அப்பு. பிரபல ரவுடியான இவர் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகள் உள்ளன. சமீபகாலமாக மர வேலைகள் செய்யும் இடத்தில் உதவியாளராக பணியாற்றிய இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சில ஆண்டுகளாக மணலி பகுதியில் வசித்துவந்துள்ளார்.இந்த நிலையில், வியாசர்பாடி கூட் செட் ரோடு உட்புறம் உள்ள முட்புதரில் தலையில் பலத்த காயங்களுடன் நவீன்குமார் கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் எம்கேபி.நகர் போலீசார் சென்று நவீன்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தபோது பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கழுத்தில் பீர் பாட்டில் குத்து இருந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.கொல்லப்பட்ட ரவுடி நவீன்குமார் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதால் யாரேனும் அவரை திட்டமிட்டு கொலை செய்தார்களா, நண்பர்களுக்குள் மதுஅருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிக்கின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow