கபடி மைதானம் அமைத்து தரக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை
கோவை: 19-08-2024. கோயம்புத்தூர் மாவட்டம் கணுவாய் பகுதியில் ஓம் முருகா கபடி அகாடமி என்கிற பெயரில் இப்பகுதி இளைஞர்கள் கடந்த 6 வருடங்களாக பல்வேறு கபடி போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவில் பரிசுகளை வென்று வரும் நிலையில் மேலும் பயிற்சி எடுக்க போதிய மைதானம் இல்லாமல் திறமை இருந்தும் வீட்டில் முடங்கி வருகின்றனர். இவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?