திருப்பத்தூர் அருகே பாலியல் தொல்லை செய்யப்பட்டதாக கொலை

கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன், இவரது உறவினர் ஆம்பூரை சேர்ந்த முருகன் வீட்டில் கடந்த 24ம் தேதி சென்டரிங் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது முருகன் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் மரக்கட்டையால் மணிகண்டனை தாக்கியதால் அவர் உயிரிழந்தார். அவரது உடலை பொன்னேரி சாலையோர ஏரிக்கரை அருகே வீசி சென்றுள்ளனர். போலீசார் இன்று உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?






