பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; நான்கு பேர் போக்சோவில் கைது

Oct 18, 2024 - 06:32
 0  4
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; நான்கு பேர் போக்சோவில் கைது

திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்தைச் சேர்ந்த முரளி (23), தனசேகர் (21), திருநாவுக்கரசு (21), பிரகலாதன் (25) ஆகியோர் அருகாமை கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் 4 பேரும் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவது சிறுமியின் தாய்க்கு தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அப்புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி தலைமையிலான போலீஸார் அந்த 4 இளைஞர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று இரவு சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow