திருவாரூர் மாவட்டத்தில் 62 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சட்ட விரோத செயல்களான கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 62 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மொத்தமாக 650 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியதாக கூறி 53 பேர் மீது வழக்கு பதியப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






