ஒகேனக்கல் காவிரி ஆற்று பகுதியில் ஆழமான பகுதிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் அடிக்கடி நீரில் மூழ்கி உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது நீரில் மூழ்கி உயிரிழக்கும் சுற்றுலா பணிகளின் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் சபாபதி அறிவுறுத்தலின்படியும் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான காவல்துறையினர் இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிகளான சின்னாறு பரிசல் துறை தொங்கு பாலம் காவிரி ஆறு முதலைப் பண்ணை ஊட்டமலை பரிசல் துறை ஆலம்பாடி காவிரி ஆறு ஏற்ற மடுவு உள்ளிட்ட காவேரி ஆறு ஆழமான பகுதிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் ஆபத்தான காவிரி ஆற்று பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு குளிக்க சென்ற சுமார் 17 சுற்றுலா வாகனங்களுக்கு அபராதம் விதித்ததுடன் ஆபத்தான பகுதிகளில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.
What's Your Reaction?






