மது அருந்தியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு;போலீஸ் விசாரணை

May 25, 2024 - 21:57
 0  5
மது அருந்தியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு;போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை:சீர்காழி அருகே வருஷபந்து கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்களைப் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். கடந்த 19ம் தேதி இரவு அரசு மதுபானக் கடையில், இவரும், இவரது மைத்துனர் மணிகண்டன் என்பவரும் மதுபானம் வாங்கி அவரது வீட்டிற்கு சென்று அருந்தியுள்ளனர். மது அருந்திய சிறிது நேரத்திலேயே இருவரும் ஒருவர் பின் ஒருவராக வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் உடனடியாக அவர்களை சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த 6 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த கணேஷ், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனிடையே ஆபத்தான நிலையில் மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணேஷின் உயிரிழப்பை அடுத்து, சீர்காழி போலீஸார் அவர்கள் இருவரும் அருந்திய மதுபான பாட்டிலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபானத்தில் கலப்படம் இருந்ததால் அவர்கள் உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல் காரணமா? என்பது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow