மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து தானும் தற்கொலை

Apr 13, 2024 - 19:45
 0  20
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து தானும் தற்கொலை
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து தானும் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைத்திய லிங்கபுரம் 2வது சாலையில் வசித்து வந்தனர் தங்கராஜ் (60), லதா தம்பதி.கைத்தறி நெசவாளரான தங்கராஜ் எங்கும் செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்ர். ஐடி நிறுவன ஊழியரான இவரது மகன் நவீனுக்கு சமீபத்தில் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், மனைவி மற்றும் மகன் தன்னை சரியாக கவனிக்காததால் கோபமடைந்த முதியவர், அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி கூறியும், தன்னை சரியாக கவனிக்கவில்லை, உணவு கூட கொடுக்கவில்லை என புலம்பி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை கேனில் எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் அவரும் தீயில் இணைந்துள்ளார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த மகன் நவீன் காப்பாற்ற முயன்றபோது, அவரும் உடல் கருகி அலறியுள்ளார்.சம்பவ இடத்திலேயே தங்கராஜ்-லதா தம்பதி உயிரிழந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நவீனை போலீசார் மீட்டு காரைக்குடி முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow