சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 1.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

Apr 13, 2024 - 20:57
Apr 26, 2024 - 14:49
 0  20
சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 1.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மதுபானக் கடை திறக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ராமேசுவரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷூக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் நல்லுசாமி தலைமையிலான போலீசார் ராமேசுவரத்துக்கு வரும் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டபோது இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமாக மீன் பெட்டியை கொணடு வந்த முத்துராமலிங்கம் என்பவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் பெட்டியில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 570 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.மேலும் இதற்கு உடந்தையாக இருந்த குமரகுரு, சாரதி, சாத்தக்கோன் ஊராட்சி மதுபானக் கடை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 570 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow