பள்ளி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை;3 பேர் கைது

Sep 25, 2024 - 12:41
 0  6
பள்ளி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை;3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவிற்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி தனது மாமா வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் விடுமுறை நாட்களில் மாமா வீட்டில் உள்ள ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவி விடுமுறையில் தனது மாமா வீட்டில் உள்ள ஆடுகளை மேய்க்க ஏரிக்கரைக்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றிருந்தார். அப்போது பணஓலைப்பாடி பகுதியைச் சேர்ந்த தனஞ்ஜெயன் என்பவரின் மகன்கள் ராமஜெயம் வயது (33)மற்றும் இவரது தம்பி பவுன்குமார் வயது (31) இருவரும் அதே ஏரிக்கரைக்கு ஆடுகளை மேய்பதற்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றிருந்தார்.மாணவியை கண்டவுடன் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி ஏரிக்கரைக்குள் அழைத்துச் சென்று சகோதரர்கள் இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை குறித்து வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவேன் என கூறி மிரட்டியுள்ளனர். மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை மறைந்து பார்த்த 57 வயதான செல்வராஜ் என்ற நபர் மாணவியை அழைத்து நடந்த சம்பவம் குறித்து கூறி மிரட்டியுள்ளார். அதன் பிறகு செல்வராஜ் மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இவர்களுடைய சொந்தரவு தாங்கமுடியாத மாணவி தனது பாட்டி மற்றும் அத்தையிடம் நடந்த சம்பவம் குறித்து மாணவி கூறியுள்ளார்.

மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது

இதனை தொடர்ந்து செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்ற செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் புகாரில் குறிப்பிட்டிருந்த ராமஜெயம், பவுன் குமார் மற்றும் செல்வராஜ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் நடந்த சம்பவம் உறுதியானது. போக்சோ சட்டத்தின் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow