திருப்பூர்:உடுமலைப்பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 17 வயது சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் உடலில் மாற்றங்கள் அதிகளவில் தென்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்று பரிசோதித்தனர். பரிசோதனையில் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.சிறுமியை விசாரித்த போது 3 சிறுவர்கள் உட்பட 9 நபர்கள் தன்னை அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமியின் உறவினர்கள் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் இந்த கொடுமையை செய்துள்ளதாக அவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. முதற்கட்டமாக 3 சிறுவர்களை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். மீதமுள்ள 6 பேரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.
What's Your Reaction?






