பாமாயில் பலகாரம் போல் பெருகி வரும் பாலியல் பலாத்காரம்;8-ம் வகுப்பு மாணவியை சூறையாடிய காமகொடூரன்

May 7, 2024 - 16:06
 0  14
பாமாயில் பலகாரம் போல் பெருகி வரும் பாலியல் பலாத்காரம்;8-ம் வகுப்பு மாணவியை சூறையாடிய காமகொடூரன்

ராஜஸ்தான் மாநிலம், ரத்தன் நகரில், தாதாரியா கிராமம் தரம்ஷாலாவைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த அனில் மேக்வால்(21) என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக போதைப்பொருள் ஜூஸ் ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். போதைப்பழக்கத்திற்கு அடிமைப்படுத்திய அனில் மேக்வால், சிறுமியை நிர்வாண நிலையில், புகைப்படங்களை எடுத்துள்ளார்.அதன் பின்னர், சிறுமியின் ஆபாசப் புகைப்படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, கடந்த ஏப்ரல் 28ம் தேதி சிறுமியை ஸ்லீப்பர் பேருந்தில் கடத்திச் சென்று ஓடும் பேருந்தில் சிறுமியை அனில் மேக்வால், இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து ரத்தன்நகர் போலீசார் ஜெய்பிரகாஷ் கூறுகையில், 8ம் வகுப்பு மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஸ்லீப்பர் பேருந்தில் சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிறுமியின் புகாரின் அடிப்படையில் அனில் மேக்வால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில், அனில் மேக்வால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow