தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கொலை; அண்ணன் உள்பட 5 பேர் கைது

கோவை இருகூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (23).வெள்ளலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பம்ப் ஆபரேட்டராக உள்ளார்.இவர் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதல் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் அண்ணன் சுருளி (எ) சுரேந்திரன் (28). கடந்த 26ம் தேதி ஜெயச்சந்திரனிடம் பேசி பெட்ரோல் பங்க்கில் இருந்து பைக்கில் தடாகத்திற்கு அழைத்து சென்றுள்ளார் அங்கு சுரேந்திரனின் நண்பர்கள் அஜித், நவீன், கார்த்திக், குழந்தை ஆகிய ஐவரும் இணைந்து தங்கையை காதலித்து கர்ப்பமாக்கியது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 5 பேரும் ஜெயச்சந்திரனை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனே அவரது குடும்பத்தினர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று மாலை கோவையில் பதுங்கியிருந்த சுரேந்திரன் உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.சுரேந்திரன் பல்வேறு அடிதடி, மோதல் விவகாரங்களில் தொடர்புடையவர் என்பதும் இவர் மீது நகர போலீசில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






