மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்;பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஏப்ரல் 26 தீர்ப்பு

Apr 16, 2024 - 15:34
Apr 16, 2024 - 18:16
 0  12
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்;பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஏப்ரல் 26 தீர்ப்பு
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்;பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஏப்ரல் 26 தீர்ப்பு
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்;பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஏப்ரல் 26 தீர்ப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கலைக்கல்லூரியில் பேராசிரியையாக நிர்மலாதேவி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்நிலையில், நிர்மலாதேவிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டு சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென DYFI நிர்வாகி கணேசன் வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது.இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாரணை நடத்த முடியாது என கூறி வழக்கு விசாரனையை ஏப்ரல் 26 தேதி தள்ளி வைத்த நீதிபதிகள் அன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow