வைகாசி விசாக திருவிழாவின்போது திருச்செந்தூர் கடலில் மூழ்கி பக்தர் ஒருவர் உயிரிழப்பு

May 22, 2024 - 20:45
 0  8
வைகாசி விசாக திருவிழாவின்போது திருச்செந்தூர் கடலில் மூழ்கி பக்தர் ஒருவர் உயிரிழப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்திற்காக முருகனை தரிசிக்க சென்றிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக கடலில் நீராடிய நிலையில், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்ற நிலையில் திருவிழாவில் தமிழகம் உட்பட பல்வேறு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெரு, முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன் மகன் செல்வகனி (26) இவர் இன்று காலை நண்பர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கடலில் குளித்த அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow