யூனிபார்மில் சாலையை சீரமைத்த கோவை போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்

May 22, 2024 - 20:03
 0  18
யூனிபார்மில் சாலையை சீரமைத்த கோவை போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்

கோவையில் ஒரு சில பகுதிகளில் தரமற்ற சாலைகள் அமைந்திருப்பதால் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும், கடந்த ஒரு வார காலமாக கோவையில் மழை பெய்ததால் சில பகுதிகளில் சாலையில் பழுதடைந்த நிலையில் உள்ளது.அதனைத் தொடர்ந்து, கோவை குட்செட் சாலை ஒருபுறம் பழுதடைந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். மேலும், ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை என்பதால் அதிகளவில் இந்த சாலையில் வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம்.மேலும் சாலை பழுதடைந்ததால் அவ்வப்போவது கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்கும் வகையில் வெரைட்டி ஹால் போக்குவரத்துக் காவலர் தமிழ்செல்வன் அந்த பகுதியில் பணி பார்த்து கொண்டிருந்தபோது, சாலை பழுதானதை கண்டு அருகிலிருந்த ஜல்லிக்கற்களை கொண்டு பழுதான பகுதியில் கற்களை கொட்டி சாலையை சீரமைத்தார்.தமிழ்ச்செல்வன் போலீஸ் உடையில் சாலையை சீரமைத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவருக்கு இணையதளம் மூலமாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow