மினி லாரி மீது கார் மோதல்; ஆசிரியர் உள்பட இருவர் பலி
தஞ்சாவூர் அண்ணாநகர் சிவாஜி நகர் மேற்கு பழனிதுரை, மகன் கிருபா பொன் பாண்டியன் (34). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர் காரில் திருச்சிக்கு சென்றுவிட்டு இன்று காலை தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். வல்லம் அருகே சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பகுதியில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் ஏறி எதிர்திசையில் சென்று நாகையில் இருந்து திருச்சிக்கு மீன் ஏற்றி வந்த மினி லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதில் பலத்த காயமடைந்த மினிலாரி டிரைவர் காரைக்கால் திரு நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் நெடுஞ்செழியன் (32), உடன் வந்த காரைக்கால் அம்பாசமுத்திரம் ஏரி பகுதியை சேர்ந்த தாஸ் மகன் மேத்யூ (26) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மினி லாரி டிரைவர் நெடுஞ்செழியன் பலியானார். இதுகுறித்து வல்லம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






