காவிரி ஆற்றல் மூழ்கி மூன்று பேர் பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் அருகே நகப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் வினித் விமல்ராஜ் (வயது 21).இவர் நேற்று முன்தினம் தர்மபுரியை சேர்ந்த நந்தகுமார், ஆந்திராவை சேர்ந்த ரகுமான் ஆகிய இருவரையும் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நாகபாளையம் ஆற்றில் குளிக்க அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் மூவரும் வராததால் வினித் விமல்ராஜின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.அதன்பின் காவிரி ஆற்றுக்கு சென்றனர். அப்போது அவர்கள் 3 பேரின் செருப்புகள், செல்போன்கள் காவிரி கரையில் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி போலீசார் அங்கு விரைந்தனர். தீயணைப்பு துறையினரும் வந்தனர். காணாமல் போன மாணவர்களை தீயணைப்பு துறையினர் நேற்று முதல் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்நிலையில் ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்களின் சடலங்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதே கல்லூரியில் படித்து வந்த நண்பர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?