வீடு புகுந்து திருட்டு; மூன்று பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வடக்கு தெருவை சேர்ந்தவர் கோமதி தேவர் மனைவி சுப்புத்தாய் (70). இவர் கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட நபர்கள் மூதாட்டி வீட்டில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் கொடுத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்பலவாணர் தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் பொன்ராஜ், கயத்தாறு சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சிவஞானம் மகன் சங்கரலிங்கம், தாழையூத்து பெருமாள் மகன் ஆறுமுகம் ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து நகை- பணத்தை மீட்டனர்.
What's Your Reaction?