மாணவிகள் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
சிவகங்கை காரைக்குடி அடுத்துள்ள சாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). காரைக்காடி பாஜ ஒன்றிய பிரசார நிர்வாகியான இவர், தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்பவராகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அரியலூர் தனியார் பள்ளியில் படித்த மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே காட்சியை கடந்த 21ம் தேதி முத்துக்குமார் தனது எக்ஸ் தள வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் திராவிடம் வளர்த்தெடுத்த பெரியாரின் பேத்திகள் என அதில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அரியலூர் மாவட்ட திராவிட கழக மகளிர் அணி பொறுப்பாளர் ராதிகா, அரியலூர் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?