மாவட்ட ஆட்சியர் தலைமையில் எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய ஆட்டோ விழிப்புணர்வு பேரணி

Aug 30, 2024 - 14:30
 0  11
மாவட்ட ஆட்சியர் தலைமையில் எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய ஆட்டோ விழிப்புணர்வு பேரணி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பற்றிய தீவிர பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.08.2024) கொடியசைத்து, தொடங்கிவைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ர்ேஆ ஒருங்கிணைப்பாளர் மரு. ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.சிவக்குமார், துணை இயக்குநர் (காசநோய்) மரு.பாலசுப்பிரமணியம், DSP (Training) திருமதி.ராமலி ராமகிருஷ்ணன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் திரு.கா.உலகநாதன் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow