10 மணி நேரத்திற்கு பிறகு குட்டி யானை பத்திரமாக மீட்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகரில் நேற்று நள்ளிரவில் யானை கூட்டம் ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் அந்த கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் இருக்கும் குட்டி யானையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியில், 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். கிணற்றின் அருகே ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி வனத்துறையினர் யானையை மீட்டனர். மீட்கப்பட்ட குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
What's Your Reaction?






