கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியருக்கு ஏழு ஆண்டு சிறை

மதுரை: கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியரின் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் 2018-ல் தேசிய கபடிப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்க வந்த பட்டியலின மாணவிக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுமேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
What's Your Reaction?






