டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு; இருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்
கோவை செல்வபுரம் அருகே அசோக் நகர் ரவுண்டானா அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ராமநாதபுரம் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (34) என்பவர் கேசியராக பணியாற்றி வருகிறார். நேரம் முடிந்து பார்-ஐ மூடி விட்டு கடை சுத்தம் செய்யும் பணி செய்தபோது அங்கே வந்த 3 பேர் அவரிடம் மது பாட்டில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மகேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து மகேந்திரன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்ற தீனா (26) ஐயூடிபி காலனி பகுதியைச் சேர்ந்த விஜய் (24) ஆகியோரை கைது செய்தனர். தினேஷ் என்ற பூச்சி தினேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றதை அடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?