ஷாப்பிங் சென்ற நேரம் பார்த்து 100 சவரன் நகை கொள்ளை

Jul 29, 2024 - 21:11
 0  9
ஷாப்பிங் சென்ற நேரம் பார்த்து 100 சவரன் நகை கொள்ளை

சென்னை திருவேற்காடு அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (44). சவுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வரும் இவருக்கு ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில், நேற்று மாலை காரில் ஷாப்பிங் செய்ய சென்னைக்கு சென்ற அவர், இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 103 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.ஜனார்த்தனன் புகாரின் பேரில் திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். தனியாக வந்த மர்ம நபர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொள்ளையனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow