3 வயது மகளைக் கொலை செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சூரியம்பாளையத்தைச் சோ்ந்தவா் சசிதரன். இவரது மனைவி கோகிலவாணி (25). இவா்களது மகள் இதழிகா (3). சசிதரன் கடந்த ஓராண்டுக்கு முன் உயிரிழந்த நிலையில், கோகிலவாணி தனது மகளுடன் பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். பட்டதாரியான இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளாா்.இந்நிலையில், குழந்தையைக் கவனிக்காமல் இருப்பதாகவும், வீட்டில் எவ்வித வேலையும் செய்வதில்லை எனவும் கோகிலவாணியை அவரது தாய் யசோதா கண்டித்துள்ளாா். இதனால், கோகிலவாணி, இதழிகாவுடன் சனிக்கிழமை இரவு வீட்டைவிட்டு வெளியேறி, பவானி கூடுதுறை அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியுள்ளாா்.இரண்டு நாள்களாகியும் அறை திறக்கப்படாததால், விடுதி ஊழியா்கள் திங்கள்கிழமை சென்று பாா்த்துள்ளனா். அப்போது, துா்நாற்றம் வீசியுள்ளது குறித்து பவானி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் குமாா், போலீஸாா் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, கோகிலவாணி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ததும், படுக்கையில் இதழிகா உயிரிழந்த நிலையில் கிடந்ததும் தெரியவந்தது. சடலங்களை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.கணவா் உயிரிழந்து நிலையில் மனவேதனையில் இருந்து வந்த கோகிலவாணி, மகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
What's Your Reaction?