உல்லாசத்திற்கு இடையூறு; 6 வயது சிறுமி கொலை

Apr 24, 2024 - 10:18
 0  10
உல்லாசத்திற்கு இடையூறு; 6 வயது சிறுமி கொலை

வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்தவர் திவ்யா (31), இவரது முதல் கணவர் விஜயகாந்த். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 6 வயதில் தேஜஸ்வி என்ற மகளும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த திவ்யா, புழல் காந்தி 2வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திவ்யாவுக்கும், உடன் பணிபுரியும் குரோம்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் (31) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் உல்லாசத்திற்கு சிறுமி இடையூறாக இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று சிறுமி தேஜஸ்வியை சீனிவாசன் குளியலறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து சிறுமியை தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சீனிவாசன் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பதில் கூறாமல் ஓடியதாக கூறப்படுகிறது.அருகில் உள்ள நகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்ததில், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் அங்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, சீனிவாசன், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா அல்லது தண்ணீரில் மூழ்கி கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow