செல்போனில் பேசியபடியே சாலையை கடந்த பெண் உயிரிழப்பு
சென்னை, அமைந்தகரையில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் அழகுக்கலை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் இரவு சாலையை கடக்கும் போது பைக் மோதியதில் பலாரியங்லால் பலத்த காயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்று அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போனில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்ற பாலாரியாங்லால் பானி மீது பைக் மோதியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான பைக் எண்ணை வைத்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.மக்கள் சாலையை கடக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். செல்போனில் பேசிக்கொண்டே சாலையை கடக்க வேண்டாம். வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மிகவும் கவனமாக இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. ஆனால் இவற்றை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என காவல் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
What's Your Reaction?