ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை

Apr 22, 2024 - 06:06
 0  7
ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (48).ஜல்லிக்கட்டு வீரர். அருண்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த தயாளன் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்குவதில் இவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டு போட அருண்குமார் வந்ததாக தெரிகிறது. அப்போது தயாளன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் சங்கர் உள்பட 6பேர் போதையில் அருண்குமாரை வாய்க்கால்கரையில் வைத்து மறித்து தகராறில் ஈடுபட்டு கட்டையால் தலையில் தாக்கி உள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow