தஞ்சை: கோவிலில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியத்துக்குப்பட்ட கண்டியங்காடு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சிவன் கோவிலில் மின்சாரம் தாக்கி சிறுவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கண்டியங்காடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த சில மாதங்களாக சிவன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கோவிலின் மின்சார பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாலு என்ற எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் தொடர்ந்து அந்த கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மின்சார வேலைகள் நடைபெற்ற பொழுது தண்ணீர் கசிந்து ஷாக்கடித்த நிலையில் அப்படியே போட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து எலக்ட்ரீசியன் வெளியேறி உள்ளார். இந்த விபரம் தெரியாமல் அந்த நேரம் அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வீரமணி (வயது 17) என்ற சிறுவன் கோயில் உள்ளே சென்றபோது மின்சார கசிவு ஏற்பட்டிருந்த வயரில் கை வைத்ததில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.பின்னர், அங்கிருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மார்ச்சுவரி அறையில் வைக்கப்பட்டுள்ளது. மதுக்கூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?