கொண்டை ஊசி வளைவில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி

May 1, 2024 - 12:23
 0  17
கொண்டை ஊசி வளைவில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி

சேலம் ஏற்காடு பகுதியில் தனியார் பஸ் ஒன்றுக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.70 பேர் பயணம் செய்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோடை விடுமுறை ஆரம்பமானதிலிருந்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அந்தவகையில் ஏற்காடுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகைத் தருகின்றனர். இதன்காரணமாக சேலத்திலிருந்து ஏற்காடுக்கு தனியார் பஸ்கள் அதிகளவில் சென்று வருகின்றன.நேற்று மாலை 5:30 மணியளவில் ஒரு பேருந்து அவ்வழியாக சென்றபோது மலைப்பாதையின் 13வது ஊசி வளைவுப் பகுதியில் திரும்பிய பேருந்தின் அச்சு முறிந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. 13வது ஊசி வளைவிலிருந்து 80 அடி கீழ் 11 வது ஊசி வளைவில் வந்து விழுந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே திருச்செங்கோட்டைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மூனீஸ்வரன், சேலத்தை சேர்ந்த கார்த்தி, ஹரிராம், மாது உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பேருந்தில் பயணித்த 66 பேரை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் ஏற்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow