50 அடி கிணற்றில் கவிழ்ந்த ஆட்டோ; இருவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள கஸ்பா அய்யலூரைச் சேர்ந்தவர் நாட்ராசன் (52). ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று முன்தினம் இரவு குருந்தம்பட்டியில் உள்ள டீக்கடையில் வேலை பார்க்கும் பழனிச்சாமி (30) என்பவரை ஆட்டோவில் அழைத்து சென்று கொண்டிருந்தார். வடமதுரை அருகே குருந்தம்பட்டி சாலையில் கெங்கையூர் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத 50 அடி ஆழ்துளை கிணற்றில் கவிழ்ந்தது.இதில் பலத்த காயமடைந்த நாட்ராசன் , பழனிசாமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் வீடு திரும்பாததால், நேற்று காலை வரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது கெங்கையூரில் உள்ள கிணற்றில் டிரைவர் நாட்ராசன் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி முதலில் நாட்ராயன் உடலை மீட்டனர்.பின்னர் கிணற்றில் இருந்து ஆட்டோவை வெளியே கொண்டு வந்து உள்ளே சிக்கியிருந்த பழனிச்சாமியின் உடலை மீட்டனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நாட்ராசனுக்கு வசந்தா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அதேபோல், பழனிச்சாமிக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?