திருப்பூர்: பல்லடம் அருகே வாகன சோதனையில் 7.50 கிலோ குட்கா பறிமுதல்

Jun 26, 2024 - 17:47
 0  10
திருப்பூர்: பல்லடம் அருகே வாகன சோதனையில் 7.50 கிலோ குட்கா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த சின்னக்கரை சோதனை சாவடியில் பல்லடம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர் அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அதில் அந்த நபரின் பெயர் அருண்குமார்(25) என்பதும், மதுரையைச் சேர்ந்த இவர் முருகம்பாளையத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அருண்குமார் 7.50 கிலோ குட்கா கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த பல்லடம் போலீசார் அவரிடமிருந்து 7.50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow