குழந்தைகள் கடத்தல் தொடர் பான காணொலிகளை நம்ப வேண்டாம்
தருமபுரி மாவட்டக் காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்.குழந்தைகளைக் கடத்துவதாக பரப்பப்படும் காணொலிகளை நம்ப வேண்டாம் என தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா' ந.ஸ்டீபன் ஜேசுபாதம் அறிவுறுத்தினாா'.இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் காவல்துறை உதவி தொலைபேசி எண் 100-ஐ அழைக்கலாம். மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வதந்திகளை மற்றவா களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம். மீறி இத்தகைய வதந்திகளைப் பரப்பும் நபா'கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா.
What's Your Reaction?