தர்மபுரி: போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி அவர்களின் தலைமையில் போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில் விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும் எனவும் கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவிடாமல் தடுத்திட தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தகுழு ஒருங்கிணைந்து செயல்பட்டு போதைப் பொருட்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.என மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, இ.ஆ.ப, தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்,மாவட்ட மேலாளர் (டாஸ்மார்க்) எஸ். மகேஷ்வரி உதவி ஆணையர் கலால் நர்மதா, தேசிய நல குழுமம்/ தேசிய நியமன அலுவலர் மரு. ராஜ்குமார் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள், மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள். உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






