கல்விக் குழுமத்தின் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
தருமபுரி மாவட்டம் நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் "பெண்கள்" அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு தேவையான தகுதிகளை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தற்போது அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களை தவிர்க்க சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் எனவும் மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் விதமாக பரிசுகளை வழங்கி இவ்விழாவினை சிறப்பித்தார்.
What's Your Reaction?