15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ வழக்கில் கைது

May 31, 2024 - 12:07
 0  6
15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ வழக்கில் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சிவநாராயணன் (21).இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 முடித்துள்ள 15 வயது சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.மேலும் சிறுமியின் பெற்றோரிடம் சிறுமியை திருமணம் செய்ய பெண் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சிவநாராயணன் மீது புளியங்குடி போலீசில் புகார் அளித்தனர்.இந்நிலையில், வாசுதேவநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி (பொறுப்பு) விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து இளைஞர் சிவநாராயணனை கைது செய்தார். பின்னர் அவரை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.சிவநாராயணன், ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு வேறொரு போக்சோ சட்டத்தில் கைதான நிலையில், தற்போது மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow