விருதுநகர் அருகே 90 பேர் மீது வழக்கு பதிவு!
விருதுநகர் மாவட்டம் கீழ ராஜகுலராமன் கிராமத்தில் ஊரணி ஆக்கிரமிப்பில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை வருவாய்த் துறையினர் அகற்றி உள்ளனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாசன் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் கிராமத்து மக்கள் 90 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
What's Your Reaction?