கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனை பாதுகாப்பாக மீட்ட காவலர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் நிரஞ்சன் என்ற 6 வயது குழந்தை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது கடல் அலையால் திடீரென அடித்துச் செல்லப்பட்டான். தகவலறிந்த கடலோர பாதுகாப்பு குழுவின் உயிர் பாதுகாப்பு பிரிவு காவலர் சூடேஸ்வரன் மற்றும் காவலர் சோலைராஜா ஆகியோர் கடலுக்குள் இறங்கி சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் குறித்து காவலர்களின் செயலை சுற்றுலா பயணிகள் பாராட்டி வருகின்றனர்.
What's Your Reaction?