திருடனுக்கு 10 ஆயிரம் வழங்குவதாக போஸ்டர் அடித்த மகன்

மதுரை மாநகர் காளவாசல் பொன்மேனிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). இவரது தந்தை வேல்முருகன் 1998-ல் ஆண்டு காலமாகிவிட்டார். இதனால், மதுரை மாநகராட்சியில் அவர் பார்த்து வந்த வேலை வாரிசு அடிப்படையில் கார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது. மாநகராட்சி பணிக்கு மகன் நடந்து செல்வதை அறிந்த கார்த்திகேயனின் தாயார் கருப்பாயி, சீட்டு கட்டிய பணத்தில் 2002ல் டூவீலர் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அன்று முதல் கடந்த 22 ஆண்டுகளாக கார்த்திகேயன் அந்த டூவீலரை ஓட்டி வந்தார்.
2021ம் ஆண்டு கரோனா நேரத்தில் கருப்பாயி காலமானார். தயாரின் நினைவாக அவர் வாங்கிக் கொடுத்த டூவீலரை நினைவுக்கூரும் விதமாக கார்த்திகேயன் அதை கண்ணும் கருத்துமாக பராமரித்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மதுரை பைபாஸ் சாலை பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தனது உறவினரை பார்க்க சென்றுள்ளார் கார்த்திகேயன்.
அப்போது அங்கு நிறுத்திவிட்டுச் சென்ற அவரது டூவீலர் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் அவரது டூவீலரை தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






