திருடப்போன இடத்தில் இப்படி தூங்கலாமா..? மாட்டிக்கினாரு ஒர்த்தரு...

Jul 26, 2024 - 06:14
 0  7
திருடப்போன இடத்தில் இப்படி தூங்கலாமா..? மாட்டிக்கினாரு ஒர்த்தரு...

கோவை: கொள்ளையடிக்க வந்த வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன் சிக்கினான். கோவை காட்டூர் ராம்நகரை சேர்ந்தவர் ராஜன் (53).இவர், பாதாம், பிஸ்தா விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி கதிர் நாயக்கன்பாளையத்தில் இருந்து வருகிறார். அவரை பார்க்க ராஜன் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார். இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். அப்போது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் இருட்டாக இருந்தது. உடனே ராஜன் தனது நண்பர் தாமோதரனையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். அங்கு அறையில் 55 வயது மதிக்கத்தக்க நபர் தூங்கிக் கொண்டிருந்தார்.தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி விசாரித்த போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசுக்கு ராஜன் தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று விசாரித்தனர். இதில், அவரது பெயர் பாலசுப்பிரமணியன் என்றும், கருமத்தம்பட்டி அருகே பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. ராஜன் வீடு பூட்டப்பட்டு இருந்ததால் கொள்ளையடிக்க வந்துள்ளார். சிறிது நேரம் தூங்கி விட்டு பொருட்களை கொள்ளை அடித்து செல்லலாம் என நினைத்த அவர் போதையில் அசந்து தூங்கி விட்டதால் மாட்டி கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow