ரூ.4,000 லஞ்சம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் தருவேன்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற 4 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கறார் காட்டியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாதவர், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தகவல் அளித்த நிலையில், அவர்களது அறிவுரையின்படி செயல்பட்டதில், மனுதாரரிடம் ரூ.4,000 லஞ்சம் வாங்கும் போது இளநிலை உதவியாளர் அஜித் சண்முகநாதன் என்பவரை லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் ராபின் ஞானசிங் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?