போதை ஊசியை விற்று லட்சக்கணக்கில் பணம் பார்த்த கும்பல்; தட்டி தூக்கிய போலீஸ்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 தொழில் பூங்காக்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு பணியாற்றும் வடமாநில தந்தவர் உட்பட பலர் கஞ்சா போன்ற போதை வஸ்துகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அதையும் தாண்டி போதை மாத்திரை போதை ஊசிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் போதை பொருட்களை ஒழிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை உபயோகித்து விற்பனை செய்து வந்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ரிஷப்/18, அபினேஷ்/23, மோகன்பாபு/21, சரவணன்(எ)தேள் சரவணன்/23, பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்த அரவிந்த் /23, கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ஈஸ்டர் ராஜ்/23, சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்ஜோ/23, தாம்பரத்தைச் சேர்ந்த தமீம்/22 மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட 10 பேரை கைது செய்து இவர்களிடம் இருந்த போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






