நாகை அருகே நடத்தையில் சந்தேகம்; மனைவி எரித்து கொலை

Apr 29, 2024 - 06:07
 0  6
நாகை அருகே நடத்தையில் சந்தேகம்; மனைவி எரித்து கொலை

நாகப்பட்டினம்: மனைவியை கொன்று உடலை எரித்த கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே அம்பல் இளங்குடியான் தெருவை சேர்ந்தவர் மனோகரன்(59).இவரது மனைவி அமுதா(55). இவர்களது ஒரு மகன், ஒரு மகள் இருவரும் திருமணமாகி சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி காஸ் சிலிண்டர் குழாய் வெடித்ததில் அமுதா தீயில் கருகி இறந்ததாக திருகண்ணபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது.இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அமுதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த அமுதாவின் கணவர் மனோகரனை சந்தேகத்தின் பேரில் போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவன், மனைவி இடையே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.கடந்த 25ம் தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மனோகரன், தனது மனைவி அமுதாவை அடித்து வீட்டில் இருந்த மின்சார ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த கொலை சம்பவத்தை மறைப்பதற்காக மனைவியின் உடலை காஸ் சிலிண்டரின் குழாயில் கட்டி வைத்து தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மனோகரனை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow