ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Jul 30, 2024 - 12:59
 0  8
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகா இரு அணைகளில் இருந்தும் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 78,443 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது இதனை தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரத்து 326 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது.இதனைத் தொடர்ந்து நேற்று கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டுள்ளது.இந்த நீர் வரத்து காரணமாக ஐந்தருவி சினியறிவு மெயின் அருவி ஆகிய அருவிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் மாற்றுப் பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 14வது நாளாக நீடித்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow