மின் இணைப்பிற்கு 10.000 லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது

Jul 30, 2024 - 05:20
 0  14
மின் இணைப்பிற்கு 10.000 லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சல்வார்பட்டியில் பட்டாசு தயார் செய்வதற்கு தேவைப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனிக்கு கூடுதல் மின் இணைப்பு கேட்டு வெம்பக்கோட்டை மின் பகிர்மான கழகத்தில் மனு அளித்தார். இதற்கு உதவி மின் பொறியாளர் சேதுராமன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ரவிச்சந்திரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். பின்னர் நேற்று மாலை தனது கம்பெனிக்கு அழைத்து ரூ.10 ஆயிரத்தை கொடுத்தபோது போலீசார் உதவி பொறியாளர் சேதுராமனை கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow