ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக விழிப்புணர்வு
ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக விழிப்புணர்வுஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக விழிப்புணர்வு.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பாக ஆடிப்பெருக்கு விழா ஒகேனக்கல்லில் 3 தினங்கள் நடைபெற்று வருகிறது .இந்த விழாவில் பல்துறை பணி விளக்க கண்காட்சியில் , உணவு பாதுகாப்புத் துறை சார்பாகவும் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, மேற்பார்வையில், அரங்கமைத்து ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால் உள்ளிட்டோர் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கம் அளித்தனர். மேலும் சேலம் உணவு பகுப்பாய்வு கூடம் முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் ஏற்பாட்டின் பேரில் நடமாடும் உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு வாகனம் மூலம் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உடன் இணைந்து ஒகேனக்கலில் விழிப்புணர்வு செய்தனர் .தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு துறை கண்காட்சி அரங்கில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உணவுப் பொருட்களில் வீட்டளவில் எளிதாக கலப்படம் கண்டறிதல் குறித்தும் குறிப்பாக தேயிலை, தேன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு, நெய், சமையல் எண்ணெய், பால், வெல்லம் உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்தும் அயோடின் உப்பு மற்றும் அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அயோடின் அவசியம் குறித்தும் உணவுப் பொருட்களைக் கொண்டு நேரடியாக செயல் விளக்கம் ஆடிப்பெருக்கு விழாவை காண வருகை தந்த பொதுமக்கள், மாணவ மாணவியர்கள், மற்றும் அரசு துறை அலுவலர்கள் முன்னிலையில் செய்து காட்டி விழிப்புணர்வு செய்தார். உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்களான உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம் எண், நுகர்வோர் தொடர்பு எண், எடை, அதிகபட்ச சில்லறை விலை, உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள் , அலர்ஜி தன்மை ஆகிய இருக்க வேண்டிய அம்சம் குறித்தும் உணவு பொருள் பாக்கெட்டுகளைக் கொண்டு விளக்கம் அளித்தார். கண்காட்சி அரங்கில் விழிப்புணர்வு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
What's Your Reaction?






