உங்களை தேடி உங்கள் ஊரில்;இருளர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் இன்று (19.06.2024), தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை ஊராட்சி, இருளர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் அடிப்படை தேவைகள் குறித்து கலந்துரையாடி, கோரிக்கைகளை கேட்டறிந்தார். உடன் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. பவித்ரா, அரூர் வட்டாட்சியர் திரு.ராதாகிருஷ்ணன், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.இளங்குமரன் ஆகியோர் உள்ளனர்.
What's Your Reaction?