மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்; 55 மசாஜ் சென்டருக்கு சீல் வைத்த காவல்துறை

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு போலீஸார் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக சென்னை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட கோயம்பேடு, அண்ணாநகர். திருமங்கலம் பகுதியில் உரிமம் இன்றி, மசாஜ், ஸ்பா என்ற பெயரில் சட்டவிரோத ஸ்பாக்கள் இயங்கி வருவதாகவும், ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் சென்னை காவல்துறையின் தனிப்படையினர் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, சென்னை மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல் 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் சட்டவிரோதமாக இயங்கி வந்தன.இதனையடுத்து அந்த மசாஜ் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






