காட்டன் சூதாட்டம்;ஆட்டோ ஓட்டுநரிடம் மோசடி செய்த நபர் கைது
வேலூர் அடுத்த சின்ன அல்லாபுரம், பனந்தோப்பு பகுதியில் காட்டன் சூதாட்டம் அதிகளவு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட ஆய்வில் சூதாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு பணத்தை இழந்து வருவதாகவும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இந்த காட்டன் சூதாட்டத்தை அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் தொடர்ந்து வந்த புகாரினை தொடர்ந்து ராஜேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநரிடம், காட்டன் சூதாட்டம் நடத்தும் சேட்டு என்பவர், தினமும் பணம் பெற்றுக்கொண்டு வந்துள்ளார். பின் மறுநாள் "உனக்கு பரிசு விழவில்லை. தினமும் பணம் கட்டினால்தான் பரிசு விழும்" என்று கூறி பணத்தை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து ஓட்டுநர் ராஜேஷ் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சேட்டு என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதையடுத்து காட்டன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நபர்கள் எழுதிய சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?